“நிச்சயம் இது ‘அது’ தான்…!” ‘பயங்கர’ காட்சியை கண்டு அலறிய பெண்… அவசர அவசரமாக ‘மோப்ப நாயுடன்’ வந்த காவல்துறை… அதிர்ச்சியை கொடுத்த ‘அதிரடி’ திருப்பம்!

 

இங்கிலாந்து நாட்டில் கேட்ஸ்ஹெட் நகரில் இருக்கும் வின்லாடோன் என்னும் பகுதியில், வில்க்இன்சன்  வின்லாடோன் என்ற கேட்டி (26) என்பவர் வழக்கம் போல் தன் நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அப்பகுதியின் தரையில் மர்ம பொருள் ஒன்று மணலில் புதைந்திருப்பதை கண்டுள்ளார்.

அது மனித உடலின் கால் பகுதி உள்ளிருந்து மேலே பார்த்து இருப்பது போல் தெரிந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த  கேட்டி, தன் மொபைல் போனில் புகைப்படம் எடுத்து தன் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அவர்களிடம்,

இது மனித கால் தான் என உறுதி படுத்திக்கொண்டார். அதுபோலவே அவரது நண்பர்கள் அனைவரும் இது மனித கால் தான் எனக் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக உடனடியாக காவல்துறை எண்ணான 101-க்கு தொலைபேசியில் தொடர்பு, தான் நேரில் கண்டதை கூறியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், தடவியல் நிபுணர்களும் மோப்ப நாயுடன் வந்து, இது மனித கால் தானா என சோதனையிட்டனர்.

அதன்பின் அப்பகுதியையும் அதை சுற்றியுள்ள பகுதியையும் தோண்டி பார்த்ததில் அங்கு எந்த உடலும் தென்படவில்லை. அதன் பின் கால் தெரிந்த இடத்தில் தோண்டியதில் அது பாதி மண்ணில் புதைந்த உருளைக்கிழங்கு என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், உண்மையை அறிந்தபின் அப்பகுதி மக்கள் சிரித்துக்கொண்டு அங்கிருந்து கடந்து சென்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
காலி கடற்படையில் முகாமில் உள்ள சிப்பாய்களுக்கு கொவிட்-19 தொற்று