அது என்னோட குழந்தையே இல்ல’… ‘சத்தியம் அடிக்காத குறையா சொன்ன மன்னர்’…  கோபத்தில் மாடல் அழகி செய்த செயல்!

மன்னருக்கும், மாடல் அழகிக்கும் விவாகரத்து ஆன நிலையில், மன்னரை வெறுப்பேற்ற அழகி செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய நாட்டில் முன்னாள் அழகி பட்டம் பெற்றவர் Oksana Voevodina. இவர் கடந்த 2018ம் ஆண்டு மதம் மாறி மலேசிய மன்னரான முகமதுவை மணந்து கொண்டார். Oksana மன்னரை மணந்து கொண்ட ஒரே ஆண்டில், அரை குறை ஆடைகளுடன் Oksana கொடுத்திருந்த புகைப்படங்கள் வெளியானது.

அதோடு ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஆண் ஒருவருடன் உடலுறவு கொள்ளும் வீடியோ ஒன்றும் வெளியாகி மன்னருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

இதனால் Oksana உடன் திருமணம் குறித்த விஷயங்கள் ஊடகங்களில் அதிகம் வெளியாவதை விரும்பாத மன்னர் முகமது தனது மன்னர் பதவியைத் துறந்தார். இருப்பினும் மன்னர் குடும்பத்தின் அழுத்தம் காரணமாக Oksana உடன் இஸ்லாமிய முறைப்படி விவாகரத்து செய்தார்.

அத்துடன் Oksanaக்கு பிறந்த ஆண் குழந்தைக்குத் தான் தந்தை இல்லை எனவும் கூறிவிட்டார் மன்னர் முகமது. அதே நேரத்தில் விவாகரத்திற்கு ஈடாக, லண்டனில் 8 மில்லியன் மதிப்புடைய வீடு ஒன்றும், மாதம் 24,000 பவுண்டுகள் வேண்டும் எனவும் Oksana மன்னரிடம் கேட்டார்.

 

ஆனால் ஜீவனாம்ச பிரச்சனை முடியாமல் நீண்டு கொண்டே சென்ற நிலையில், தனது மகனின் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என மன்னர் குடும்பத்திலிருந்து அழுத்தம் தரப்படுவதாக Oksana குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் விவாகரத்து பிரச்சனையால் வெறுப்படைந்த Oksana, மன்னர் முகமதுவை வெறுப்பேற்றத் தனது மகனின் புகைப்படங்களை வெளியிடத் தொடங்கியுள்ளார்.

அதுவும் மதம் மாறிய பின்னர் தனக்கு இடப்பட்ட பெயரான Rihana Petra என்ற பெயரிலேயே மகனின் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.  இது மேலும் மன்னர் தரப்பை எரிச்சல் அடையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியா வைத்தியசாலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு