இலங்கையில் பல்லாயிரக்ககணக்கான போதை மாத்திரைகள் மீட்பு! : இதன் பெறுமதி எவ்வளவு தெரியமா?

பெல்ஜியத்தில் இருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட 135 மில்லியன் ரூபா பெறுமதியான போதை வில்லைகளை இலங்கை சுங்கம் கைப்பற்றியுள்ளது.

மத்திய தபால் பரிமாற்றகத்தில் இந்த போதை வில்லைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

தென் ஆசியாவிலேயே இதுவரையில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவான போதை மாத்திரை தொகை இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

எக்ஸ்டசி (Ecstasy) வகையிலான 18,000 போதை வில்லைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க ஊடகப்பேச்சாளர் மேலதிக சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

 

Ecstasy போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென சுங்க ஊடகப்பேச்சாளர் கூறினார்.

விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொதியில் இருந்து இந்த போதை வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
நீர்கொழும்பு கடற்பரப்பில் சிக்கியது மலைக்க வைக்கும் போதைப்பொருட்கள்… இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?