காவல்துறை அவசர இலக்கத்துடன்  (119) விளையாடியவருக்கு நேர்ந்த கதி!

காவல்துறை அவசர இலக்கமான 119 ஐ அழைத்து தவறான தகவல் வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தெஹிவளை, கல்தெர கார்டனில் வசிக்கும் 40 வயதானவரே கைதாகினார்.

குறித்த நபர் கடந்த 5ஆம் திகதி தன்னுடைய தொலைபேசியிலிருந்த பொலிஸ் அவசர அழைப்பை ஏற்படுத்தி, கண்டியில் ஒரு சம்பவம் நடப்பதாக போலியான தகவல் வழங்கியதை அடுத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் .

கைதானவர் ஈரான், அமெரிக்காவில் தொழில் மற்றும் கற்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவரது சகோதரர்கள் மத்திய கிழக்கில் தற்போது தொழில் புரிந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டபோது, அவர் மருத்துவ சிகிச்சை பெறுபவர் என்பதற்கான சில ஆவணங்களை தாயார் சமர்ப்பித்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் மேலும் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை