யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியில் வெள்ளைவானில் சென்ற கொள்ளைக் கும்பல் ஒன்று கத்திமுனையில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றது.
கடந்த இரவு மூவர் அடங்கிய குறித்த குழுவினர் உரும்பிராய் சென் மைக்கல் தேவாலயத்திற்கு அண்மித்த வீடு ஒன்றை உடைத்துள்ளனர்
இதன்பின் உள்ளே இருந்த பிள்ளைகள் இருவர், தாய், தந்தையரை கத்திமுனையில் மிரட்டி வீட்டில் நீண்ட நேரமாக தேடுதல் நடத்தி பெருமளவான தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இதேவேளை கொள்ளையர்கள் பிள்ளைகளில் ஒருவரை கத்தியால் காயப்படுத்தியதாகவும் தெரியவருகிறது.
அத்தோடு அந்த குறித்த கொள்ளைக் குழு தப்பிச் சென்றுள்ளது