நீர்கொழும்பு கடற்பரப்பில் சிக்கியது மலைக்க வைக்கும் போதைப்பொருட்கள்… இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நீர்கொழும்பிற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 60 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவ படகொன்றை சோதனைக்குட்படுத்தியபோது அதிலிருந்து 100 கிலோகிராமிற்கும் மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் 80 கிலோகிராம் ஹஷீஸ் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

நான்கு சந்தேக நபர்களும் போதைப்பொருளும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் நால்வரும் சிலாபம் – தொடுவாய் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

 

போதைப்பொருள் ஒழிப்புக்கான அரசாங்கத்தின் கூட்டுத் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் கடற்பரப்பில் தொடர்ந்தும் ரோந்து பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
யாழில், கொவிட்-19 தொற்றின் காரணமாக மூடப்படும் பாடசாலைகள்