யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் இன்று திங்கட்கிழமை 641 பேருக்கு கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,
அவர்களில் யாழில் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ். அளவெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும், மானிப்பாய் மற்றும் நவாலியில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
அத்துடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.