பல மாதங்களாக குடும்பத்துடன் காரில் வசித்த தமிழருக்கு கிடைத்த அதிர்ஷடம்!

மலேசியாவில் சென்ற ஆண்டு சித்திரையில் தமது வீடு தீக்கிரையானதால் கடந்த எட்டு மாதங்களாக மனைவி, மூன்று பிள்ளைகளுடன் காரில் வசித்து வந்த கணேஷ் சௌந்தராஜாவுக்கு பினாங்கு மாநில அரசாங்கம் தற்காலிக அடுக்குமாடி குடியிருப்பு வாடகை வீட்டை வழங்கியுள்ளது.

33 வயதான கணேஷ், இவரது மனைவி, எட்டு மாதம் முதல் ஆறு வயதுடைய மூன்று குழந்தைகளுடன் வாடகை வீட்டில் குடியேறினர்.

எதிர்பாராத நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்காலிக அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு 90 ரிங்கிட் வாடகை நிர்ணயிக்கப்பட்டாலும், புதிய வீடு தேடும்வரை இலவசமாக தங்கி இருப்பதற்கு கணேஷ் குடும்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பழைய ‘புரோட்டோன்’ ரக காரில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த கணேஷ் குடும்பத்திற்கு இதன்வழி விடியல் பிறந்துள்ளது.

அரசு சார்பற்ற இயக்கம் ஒன்றின் மூலம் இவரது விவகாரம் ஊடகங்களில் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த கொடைவள்ளல் இபிட் லியூ என்பவர் கணேஷ் குடும்பத்திற்கு வீட்டிற்குத் தேவையான மின்சாரப் பொருட்களையும் இதர வீட்டு உபயோகப் பொருட்களையும் வாங்கித் தந்ததாகக் கூறப்படுகிறது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
உணவுக்காக தேங்காய் பறித்த நபர்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு