வவுனியாவில் கொவிட்-19 இன் எதிரொலி : முடக்கப்பட்டது பட்டானிச்சூர் கிராமம்

வவுனியா பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து இன்று (04.01.2021) காலை அப்பகுதி சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியல் தொழில்நுட்ப பீடத்தில் 3ம் வருடத்தில் கல்வி கற்கும் வவுனியா பட்டானிச்சூர் மாணவர் ஒருவருக்கும் அதே பகுதியினை சேர்ந்த பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த கர்ப்பவதி பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் மற்றும் அவர்கள் சென்று வந்த இடங்களை தனிமைப்படுத்தி பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை வவுனியா சுகாதார பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அந்த வகையில் அவர்களது வசிப்பிடம் அமைந்துள்ள பகுதி மற்றும் அவர்கள் நடமாடிய பகுதிகளை உள்ளடக்கிய பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள 1ம் ,2ம்,3ம் ,4ம்,5ம் ஒழுங்ககைகள் மற்றும் வேப்பங்குளம் பின்பகுதி , குள வீதி , பட்டக்காடு உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
திருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம் மீட்பு!