ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் கைது

மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய நபரொருவர் அம்பலாங்கொடை, பென்வெல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் இருந்து 1.6 கிலோ கிராம் ஹேரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் 8 பொதிகளில் வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 600 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை இன்று (01) பலபிடிய நீதவான் நீதிமன்றில முற்படுத்தி 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவினை பெற எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
‘தோழியின் கணவர் மீது வந்த காதல்’… ‘அதை கேட்டதும் டபுள் ஒகே சொன்ன மனைவி’… தலைசுற்ற வைக்கும் தம்பதியரின் காதல் கதை!