‘நடிகை சித்ரா இந்த விஷயத்துக்காக தற்கொலை செய்து கொண்டாரா..?’ – வெளியான ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கை

நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் கடந்த மார்கழி 9-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட, ஶ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஶ்ரீயின் தலைமையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

இதையடுத்து சித்ராவின் கணவர் ஹேம்நாத், அவரின் பெற்றோர்கள், சித்ராவின் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் அவருடன் நடித்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

இதை தொடர்ந்து தற்போது ஆர்.டி.ஓ தரப்பில் பூவிருந்தவல்லி உதவி ஆணையரிடம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் ‘நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இன்றைய தினத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய பலர் கைது