சிம்பு நடிக்கவிருக்கும் பத்து தல படத்தில் – அட இந்த இளம் ஹீரோயினும் நடிக்கிறாங்க.!

சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படம் குறித்து செம அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன். இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அடுத்ததாக சிம்பு – கௌதம் கார்த்திக் இணையும் படத்தின் டைட்டில் ‘பத்து தல’ என அறிவிப்பு வெளியானது.

 

 

சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கரும் நடிப்பதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

ப்ரியா பவானி ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள படக்குழு, அவர் படத்தில் நடிக்கும் சர்ப்ரைஸ் தகவலையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளியை அழைத்து வந்த சுகாதார பணி உதவியாளருக்கு கொவிட்-19 தொற்று!