இரயில் தண்டவாளத்தில் அன்னப்பறவை செய்த காரியம்!’.. உடனடியாக 20 இரயில்களை ரத்து செய்து நிர்வாகம் காட்டிய நெகிழ்ச்சி!

இணைப் பறவை இறந்த துக்கம் தாளாமல் அதன் உடலருகே அமர்ந்திருந்த அன்னப் பறவையால 23 ரயில்கள் பயணத்தைத் தொடர முடியாமல் காத்திருக்க வேண்டியதாயிற்று.

ஜெர்மனியின் கேசல், கோட்டிங்கன் நகரங்களுக்கிடையேயான அதிவேக ரயில் தடத்துக்கு அருகில் இரு அன்னப் பறவைகள் சுற்றித் திரிந்ததாக கேசல் நகர போலிசார் தெரிவித்தனர்.

அவற்றில் ஒன்று மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தது. இறந்துபோன பறவையின் உடலுக்கருகில் அமர்ந்த அதன் இணை அவ்விடத்தை விட்டு நகருவதாயில்லை.

அதனால் அந்தத் தடத்தில் செல்ல வேண்டிய 23 ரயில்கள் தங்களது பயணத்தை ஒத்தி வைத்துக் காத்திருந்தன.

தீயணைப்புப் படையினர் சிறப்பு உபகரணங்களைக் கொண்டு  உயிருடனிருந்த அன்னப் பறவையை அவ்விடத்தில் இருந்து அகற்றினர். பத்திரமாக மீட்கப்பட்ட அது, பின்னர் ஃபுல்டா நதியில் விடப்பட்டது.

சுமார் 50 நிமிட தாமதத்துக்குப் பிறகு ரயில்கள் அந்தத் தடத்தில் பயணத்தைத் தொடர்ந்தன.

கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் நேற்று வெளியாகின.

பொதுவாக, அன்னப் பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடன் தான் வாழும் என பிரிட்டனின் ராயல் சொசைட்டி பறவைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கிளிநொச்சியில் ஏற்பட்ட கனமழையால் பல குடும்பங்கள் பாதிப்பு;  மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!