கொவிட்-19 தொற்றுக்குள்ளான சிறைக்கைதிகள் தப்பியோட்டம்

பொலன்னறுவையில் அமைந்துள்ளத கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 5 சிறைக்கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த கைதிகள் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் வைத்து கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் குறித்த சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் 22, 23, 26, 32 மற்றும் 52 வயதுடைவர்கள் எனவும் குறித்த அனைத்து கைதிகளும் போதைப்பொருளுக்கு அடிமையாளர்கள் என காவல்துறை ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 

தப்பிச் சென்ற கைதிகளை கைது செய்வதற்காக காவல்துறை மற்றும் இராணுவத்தினர் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகள் தொடர்பில தகவல் தெரிந்தால் 0718 591 233 அல்லது 119 என்ற இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு காவல்துறை, பொதுமக்களை கோரியுள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டர் செல் மீட்பு!