இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படம்… ஹீரோயினாக நடிக்க போகும் ‘பாவக்கதைகள்’ நடிகை?

இயக்குனர் வெற்றிமாறன் – சூரி படத்தின் படப்பிடிப்பு நேற்று சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் ஹீரோயினாக க.பெ.ரணசிங்கம் படத்தின் மூலம் கவனம் பெற்ற ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. சமீபத்தில் Netfilx தளத்தில் வெளியான ‘பாவக்கதைகள்’ தொடரிலும் தனது சிறப்பான நடிப்பாற்றலை அவர் வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய கவிதை ஒன்றை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. பெயரிடப்படாத இந்த படத்தை வெற்றிமாறனின் Grass Root Film Company தயாரிக்கிறது. இந்த படத்தின் கதாபாத்திரத்துக்கு சூரியின் திரை நடிப்பு கச்சிதமாக பொருந்தும் என்பதால் தான் அவரை தேர்வு செய்துள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு அவர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் மேல் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது. இந்த படத்தை கலைப்புலி S தாணு தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
அது என்னோட குழந்தையே இல்ல’… ‘சத்தியம் அடிக்காத குறையா சொன்ன மன்னர்’…  கோபத்தில் மாடல் அழகி செய்த செயல்!