வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட தாயும் குழந்தையும்… ‘வெளியான கண்கலங்க வைக்கும் காரணம்’

வவுனியா, பறண்நட்டகல் பகுதி கிணறு ஒன்றிலிருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை நேற்று முன்தினம் (28.12.2020) ஓமந்தை காவல்துறையினர் மீ.ட்டிருந்தனர்.

குறித்த இருவரும் கடந்த 27ம் திகதி அவர்களது வீட்டில் இருந்துள்ளனர். எனினும் இரவு 12 மணியவிளவில் காணாமல்போயிருந்த நிலையில் ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடி வந்த நிலையில்

நேற்று முன்தினம் 28-ம் திகதி காலை வீட்டுக்கு அருகில் இருந்த வயல் கிணறு ஒன்றிலிருந்து அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 42 வயதான தாயும் அவரது மூன்று வயதான மகளும் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த தாய், தனது குழந்தையுடன் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அப் பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
நாட்டில் இவ்ளோ போலி மருத்துவர்களா? – மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!