எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் பாம்பு மசாஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மசாஜ் செய்ய வருபவர்களைப் படுக்க வைத்து அவர்கள் முதுகின் மேல் மலைப் பாம்பு முதல் சாரைப் பாம்பு வரை 28 வகையான பாம்புகளை அள்ளி வைக்கின்றனர்.
அந்த பாம்புகள் அவர்களின் தலை முதல் கால் வரை ஊர்ந்து செல்கின்றன. கேட்பதற்கே நடுக்கமாக இருக்கும் நிலையில், அந்த பாம்புகளால் மனிதர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படாதா என்ற கேள்வி எழலாம்.
ஆனால் அந்த பாம்புகள் அனைத்தும் விஷத் தன்மை அற்றவை என மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளார்கள். அதே நேரத்தில் உடம்பில் எத்தகைய வலியுடன் வந்தாலும், பாம்பு மசாஜ் செய்தால் அந்த வலி அனைத்தும் பறந்து சென்று விடும் எனவும் அடித்துக் கூறுகிறார்கள்.
சுமார் 30 நிமிடம் வரை செய்யப்படும் இந்த பாம்பு மஜாஜிற்கு இலங்கை மதிப்பில் 1500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த மசாஜை செய்வதற்கு எந்த விதமான வயது வரம்பும் இல்லை என்பதால், இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பலரும் வார இறுதி நாட்களில் இந்த மசாஜ் நிலையத்திற்குப் படையெடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
WATCH: A spa in Cairo is offering snake massages for relieving muscle pain and soothing joints pic.twitter.com/exNpTL0DY0
— Reuters India (@ReutersIndia) December 29, 2020