இலங்கையின் மிக வயதான பெண்மணியாகக் கருதப்பட்ட களுத்துறை தொடங்கொடையைச் சேர்ந்த ‘வேலு பாப்பானி அம்மா’ என அழைக்கப்படும் 117 வயதான மூதாட்டி நேற்றுச் செவ்வாய்க்கிழமை (29.12.2020) பிற்பகல் காலமானார்.
1903, மே மாதம்- 03 ஆம் திகதி களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்த இவர் இரு பிள்ளைகளின் தாயார் ஆவார்.
அவரது விபரங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முதியவரின் அடையாள அட்டை மூலமாகவும் சரிபார்க்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த வருடம் (2019) ஐப்பசி- 01 ஆம் திகதியான சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர்கள் தினத்தன்று இந்நாட்டின் மிகவும் வயதான பெண் எனத் தெரிவிக்கும் சான்றிதழை முதியயோருக்கான தேசிய கவுன்சில் வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.