கடந்த 10 நாட்களில் இலங்கையில் வீதி விபத்துக்களில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதிப் காவல்துறைமா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட வாகன சுற்றிவளைப்பில் 573 வாகன விபத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது தொடர்பாக வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றத் தவறியதே இந்த விபத்துகளுக்கு காரணம் என்று அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.