யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (29.12.2020) 410 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் வடபகுதியைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதற்கமைய உடுவில் பகுதியில் ஏற்கனவே கொரோனாத் தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்கும், சுன்னாகம், தெல்லிப்பழை மற்றும் கீரிமலையில் தலா ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் ஐவருக்கும், கிளிநொச்சி covid-19 சிகிச்சை நிலையத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அவர் குறிப்பிட்டார்.