ஐ,சி.சி.யின் தசாப்த விருது பெற்ற வீரர்களின் விபரம்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்களைத் வைத்து, தசாப்தத்தின் கனவு ஒரு நாள், டெஸ்ட், மற்றும் 20 ஓவர் அணிகளை வெளியிட்டது.

இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம், இந்த தசாப்தத்தின் சிறந்த வீரர், சிறந்த ஒரு நாள் போட்டி வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் சிறந்த அறிமுக வீரர் ஆகியோர்களை தேர்வு செய்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் இந்த தசாப்தத்தின் சிறந்த வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் தசாப்தத்தின்

அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர் – விராட் கோலி (இந்தியா)

சிறந்த ஒரு நாள் வீரர் போட்டி – விராட் கோலி (இந்தியா)

சிறந்த டெஸ்ட் வீரர் – ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்ரேலியா)

சிறந்த டி-20 வீரர் – ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்)

அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர் –  விராட் கோலி (இந்தியா)

ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டர் – மகேந்திர சிங் தோனி (இந்தியா)

(கடந்த 10 ஆண்டுகளில் அறத்துடன் விளையாடிய விருதுக்கு தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில், ரன் அவுட்டான இயான் பெல்லை திரும்ப பேட்டிங் செய்ய அழைத்ததற்காக இந்த விருதுக்கு தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.)

சிறந்த டி-20 வீராங்கனை –  எல்லிஸ் பெர்ரி (அவுஸ்ரேலியா)

சிறந்த ஒரு நாள் வீராங்கனை – எல்லிஸ் பெர்ரி (அவுஸ்ரேலியா)

அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த வீராங்கனை – எல்லிஸ் பெர்ரி (அவுஸ்ரேலியா)

வெற்றி பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் அவர்கள் என்றுமே மறக்க முடியாத நினைவு பரிசை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது. இதற்காக மும்பையில் உள்ள கல்ச்சர் ஷாப் மற்றும் ஓவிய கலைஞர் பிரதாப் சால்கேவுடன் இணைந்து இந்த விருதுகளுக்கு ஐசிசி வடிவம் கொடுத்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
திருமணத்திற்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மணமகள்