வவுனியாவில் தாயும்  குழந்தையும் சடலமாக மீட்பு!

வவுனியா – பறண்நட்டகல் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து, தாய் ஒவரும் அவரது மூன்று வயது பிள்ளையும் ஓமந்தை காவல்துறையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்றையதினம் அவர்களது வீட்டில் இருந்துள்ளனர். எனினும் இரவு 12 மணியவிளவில் காணாமல்போயிருந்த நிலையில், ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடியுள்ளனர்.

இந்நிலையில் இன்றையதினம் காலை, வீட்டுக்கு அருகில் இருந்த வயல்வெளி கிணறு ஒன்றில் இருந்து, அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள்,  அதே பகுதியை சேர்ந்த ரமேஸ் ஜெயலலிதா வயது – 42, மற்றும் அவரது மூன்று வயது மகளான றிதுர்சனா ஆகியோர் ஆவர்.

சடலங்கள், உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரி அபயாவின் மர்மம் நிறைந்த கொலை வழக்கு…  28 வருடங்களுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு!