வவுனியாவில் மருத்துவர்களுப்பட பலர் சுய தனிமைப்படுத்தலில்…

கொரோனா வைரஸ் தொற்றிய பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் 5 மருத்துவர்கள் உட்பட சுகாமார பணியாளர்கள் இன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வவுனியா, உலுக்குளம், ஜன உதா கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து, அவர் சிகிச்சை பெற்ற வவுனியா வைத்தியசாலையின் மருத்துவர்கள் உட்பட ஊழியர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


சத்திர சிகிச்சை மருத்துவர் உட்பட 5 மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட 18 சுகாதார ஊழியர்கள் என 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொரோனா தொற்றால் இறந்த பெண் வசித்து வந்த உலுக்குளம் ஜன உதான கிராமத்தில் வசித்து வரும் சுமார் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.


உயிரிழந்த பெண் சென்று வந்த இடங்களை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்ட பெண்கள்… 69 ஆயிரம் கருத்தடை மாத்திரைகளை ஆசாமி செய்த மோசமான செயல்… ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த கதை!