முகப்புத்தகம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

முகப்புத்தக வலைத்தளத்தின் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரம்மல மற்றும் நிட்டம்புவ பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், முகப்புத்தக கணக்குகளில் ஊடுருவி சம்பந்தப்பட்ட கணக்கின் உரிமையாளர் அனுப்பும் வகையில் அவரின் நண்பர்களிடம் பணம் கோரி குறுந்தகவல் அனுப்பியுள்ளனர்.

கடன் அடிப்படையில் அவசர தேவைக்காக பணம் தேவைப்படுவதாக இவ்வாறு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இவ் பணமோசடிக்காக பயன்படுத்திய சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கடத்தப்பட்ட தேரர் சடலமாக மீட்பு : பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது