மர்ம்மான முறையில் கொலை செய்யப்பட்ட இளைஞன்… கிளிநொச்சியில் இடம்பெற்ற கொடூர சம்பவம்!

கிளிநொச்சி முழங்காவில் காவல்துறை பிரிவின் பகுதியொன்றில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் பல்லவராயன் கட்டசோலை மாதிரி கிராமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தின் போது செல்வரத்தினம் பிரதீபன் என்ற 32 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலத்தின் கழுத்து பகுதியில் முறிவுகள் காணப்படுவதாகவும், கால் பகுதியில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

அத்தோடு சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் முழங்காவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொவிட்-19 நோயாளி தப்பியோட்டம்