நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வந்த ஒரு தொகை மஞ்சள் மீட்பு

ஹூங்கம காவல்துறை பிரிவுக்குட்பட்ட கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட உலர்ந்த மஞ்சள் தொகையுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மீன்பிடி படகொன்றை அவதானித்த விசேட அதிரடிப்படையினர் அதனை சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த படகில் எடுத்து வரப்பட்ட 20 ஆயிரம் கிலோ கிராம்  உலர்ந்ந மஞ்சள் தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் கலமெட்டிய , குடாவெல்ல,கோட்டகொட மற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்தியாவிலிருந்தே இந்த மஞ்சள் தொகையை கொண்டுவந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த  கடத்தல் செயற்பாடுக்கு மேலும் சிலர் உதவி ஒத்தாசைகளை வழங்கியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதனால் இது தொடர்பில்  காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஹூங்கம பொலிஸாருடன் இணைந்து விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
முகப்புத்தகம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது