நாட்டில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திக்கு தடை!

ஒரு தடவை பயன்படுத்தி வீசி எறியப்படும், உக்காத பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இச் செய்தியை (23.12.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த அறிவித்தலின் நகல் மேலதிக ஆலோசனைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், காதை குடைய பயன்படுத்தும் குச்சிகள், மிதக்கக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், 20 மில்லி லீற்றரை விட குறைந்த கொள்ளளவுடைய ஸஷே பக்கட்டுக்கள் முதலான ஆறு உற்பத்திகள் தடை செய்யப்படவுள்ளன.

இந்தத் தடையை தை முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்தக்கோரி தாம் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ததாக அமைச்சர் கூறினார். இதற்காக குறித்த பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு நிவாரண காலம் ஒன்றை வழங்க அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
நாட்டில் சமூகவளைத்தளங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்ய அரசாங்கம் முடிவு