கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் வரையறுக்கப்பட்ட ஆசனங்களுடன் தை முதலாம் திகதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 25 சதவீத இருக்கை வசதியுடன் திரையரங்குகள் இயங்கும் என்று தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தனிமைப்படுத்தப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மட்டுப்படுத்தப்பட்ட ஆசன வசதிகளுடன் மீண்டும் திறக்கப்படவுள்ளன.