உக்ரைனிலிருந்து கொத்தமல்லி என இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்கள்… அதில் இருந்ததோ வேறு… சுங்க அதிகாரிகள் அதிரடி  சோதனை!

உக்ரைனிலிருந்து கொத்தமல்லி என்ற போர்வையில்  இறக்குமதி செய்யப்பட்ட விவசாயக் கழிவுகள் பொருட்கள் அடங்கிய 28 கொள்கலன்கள்.

இவை உக்ரைனிலுள்ள AGRONIKA TRADE எனப்படும் நிறுவனத்தினால் இந்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆம் திகதி இந்த 8 கொள்கலன்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 20 கொள்கலன்கள் 21ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் கொள்கலன்களில் கொத்தமல்லி இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.கொள்கலன்களில் நான்கு கொள்கலன்கள் நேற்று மாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது கொள்கலன்களில் விவசாயக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இறக்குமதியாளர்கள் மோசடியில் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன குறிப்பிட்டார்.

இலங்கை சுங்கத்தின் சட்டங்களுக்கு அமையவும், சுற்றாடல் சட்டத்திற்கு அமையவும், தாவர பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் அவற்றை இலங்கைக்கு இறக்குமதி செய்யவோ வைத்திருக்கவோ முடியாது என்பதால், அவற்றை மீண்டும் உக்ரைனுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுனில் ஜயரத்ன கூறினார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் கொவிட்-19 தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் வேகமாக அதிகரிப்பு!