ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய… பயன்படுத்தப்பட்ட ஆணி???” – ரகசிய அறைக்குள்… ‘ஆதாரங்களுடன்’ கண்டெடுப்பு!!!

செக் குடியரசு நாட்டில் அமைந்துள்ள மிலேவ்ஸ்கோ மடாலயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிசய பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த மடாலயத்தின் குழி ஒன்றில் கிடைத்த பெட்டிக்குள் ஆறு அங்குல நீளமுள்ள ஆணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணி இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய பயன்படுத்த ஆணி என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இதில் ‘ஐ.ஆர்’ (IR) என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இது, ‘இயேசு ஒரு ராஜா’ என்பதை குறிக்கிறது.

கடந்த 15 ஆம் நூற்றாண்டின் போது, ஹுஸைட் படைகளிடம் இருந்து கலை பொருட்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டி கட்டப்பட்ட அறை தான் இது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, இதே போன்று சிலுவையில் அறையப்பட்டதுடன் தொடர்புடையன ஆணிகள் பலவற்றை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் புதிதாக கிடைத்த ஆணி மீது நிபுணர்கள் சந்தேகங்களையும் முன் வைக்கின்றனர். இது தொடர்பான உறுதியான தகவல் குறித்து அடுத்த ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், தற்போது கிடைத்துள்ள ஆணியில் சிலுவையில் அறையப்பட்ட போது இருந்த மரத்துண்டுகள் இதில் பதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இது நிச்சயம் ஏசு சிலுவையில் அறையபட்டத்துடன் தொடர்புடைய ஆணியாகத் தான் இருக்கும் என்றும் கணித்துக் கூறுகின்றனர்.

முன்னதாக, இதே போன்று கடந்த 2011 ஆம் ஆண்டில் சிம்கா ஜேக்கபோவிசி என்ற திரைப்பட இயக்குனர் ஒருவர் தனது ஆவணப்படத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட ஆணிகளை கண்டுபிடித்ததாக தெரிவித்திருந்தார். ஆனால், அதனை அப்போதைய அறிஞர்கள் பலர் நிராகரித்து விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
நாட்டில் மற்றுமொரு ஆடைத்தொழிற்சாலை தொழிலாளர்களிற்கு கொவிட்-19 தொற்று!