சிலாபத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மஞ்சள்…  இவ்வளோ பெறுமதியா…?

சிலாபம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் காவல்துறை விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நுரைச்சோலை காவல்துறையுடன்இணைந்து 67 பொலித்தீன் உரைகளில் அடைக்கபட்ட 2125 கிலோ உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிலாபம் காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மாம்புரி பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 மஞ்சள் பொதிகளையும் கடற்கரை பகுதில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 மஞ்சள் பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த மஞ்சள் 85 இலட்சம் ரூபா பெருமதியென பொலிசார் தெரிவித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
யாழில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் வவுனியாவில் கைது