வவுனியாவில் கொவிட்-19 ஆல் பிரபல உணவகம் பூட்டு

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மாச்சி உணவகம் மூடப்பட்டுள்ளது.

வவுனியா திருவநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி அம்மாச்சி உணவகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களிற்கமைய அம்மாச்சி உணவகம் மூடப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியாவில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணிய பலர் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், சில வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கடலிலும் கொவிட்-19 தொற்று ஏற்படும் அபாயம்… : அதிர்ச்சி அளிக்க வைக்கும் காரணம்!