வவுனியா – ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் வயல் காணியிலிருந்து மோட்டார் செல்லொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வயல் காணியில் வெடிபொருள் இருப்பது தொடர்பாக இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை காவல்துறை மற்றும் புலனாய்வு பிரிவினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.