யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று திங்கட்கிழமை(21) 383 பேருக்கான கொவிட-19 தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதில், அவர்களில் மூவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மருதனார்மடம் சந்தைப் பகுதிக்குச் சென்று வந்த கோப்பாய், ஊர்காவற்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவருக்கும், ஏற்கனவே கொவிட்-19 தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்டவருடன் முன்னர் தொடர்பிலிருந்த இணுவிலைச் சேர்ந்த ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.