தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் மிஷ்கின். இவர் தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதில் இறங்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அண்மையில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று நடிகை ஆண்ட்ரியா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
இணையத்தில் வெளியான இந்த போஸ்டர், ரசிகர்களை கவர்ந்து வருவதுடன், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.
Let’s light the candle and celebrate the special day of our protagonist Andrea. @andrea_jeremiah
Happy birthday and wishing you a long creative life.
-Mysskin #pisasu2@Lv_Sri @Rockfortent @kbsriram16 @PRO_Priya pic.twitter.com/8N366Hs2gD— Mysskin (@DirectorMysskin) December 20, 2020