மிருக வதையை கட்டுப்படுத்துவதற்காக கட்டளைச் சட்டங்களை விரைவில் திருத்தவுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் C.B. ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த வீரசிங்க எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
காட்டு யானைகளை ஒழுங்குபடுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய திட்டங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதற்கேற்ப, வனஜீவராசிகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.